உக்ரைனின் எஃப்-16 போர் விமானக் கோரிக்கை – நிராகரித்த அமெரிக்க அதிபர் பைடன்!
உக்ரைன் – ரஷ்ய யுத்தம் தீவிரமடைந்துள்ளநிலையில், உக்ரைன் அதிகாரிகள் வான் வழிப் பாதுகாப்பிற்கு உதவுமாறு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வான் வழிப் பாதுகாப்பிற்காக உக்ரைனுக்கு எஃப்-16 போர் விமானங்களை அனுப்ப முடியாது எனக் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு அமெரிக்கா குறித்த போர் விமானங்களை வழங்குமா என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொது அதிபர் பைடன் இதனைக் கூறியுள்ளார்.
எஃப்-16 ஜெட் விமானங்கள் உலகின் சிறந்த போர் விமானங்களில் ஒன்றாக உள்ளதுடன், இந்த வகை போர் விமானங்களை பெல்ஜியம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் வைத்திருக்கின்றன.
இந்தநிலையில், தனது வான்பரப்பினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு உக்ரைன் அமெரிக்காவிடம் குறித்த விமானங்களை கோரியிருந்தது.
இதற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு வேறு வகை இராணுவ உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும், எஃப்-16 ஜெட் விமானங்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.