வன்னிப்பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!! (படங்கள்)
வன்னிப்பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஓசான் கேவிவிதாரண இன்று தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சந்தன அழகுக்கோன் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து அவ்விடத்திற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபரை பொலிஸ்மா அதிபர் நியமித்துள்ளார். கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய ஓசான் கேவிவிதாரண வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக இன்று தனது கடமைகளை சர்வமத சமய நிகழ்வுகளுடன் பொறுப்பேற்றுக் கொண்டார்.