கனேடிய பொருளாதாரத்தில் மாற்றம் – வெளியாகிய புள்ளிவிபரவியல் !!
கனேடிய பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் கனேடிய பொருளாதாரம் 0.1 வீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் நாட்டின் பொருளாதாரம் நான்காம் காலாண்டில் 1.6 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.
மூன்றாம் காலாண்டு பகுதியில் வருடாந்த அடிப்படையில் நாட்டின் பொருளாதாரம் 2.9 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் பொதுத்துறை, போக்குவரத்து, நிதி மற்றும் காப்புறுதி ஆகிய துறைகளின் உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, கட்டுமானம், உணவுச் சேவை, தங்குமிட வசதி சேவை உள்ளிட்டனவற்றில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2022ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 3.8 வீதமாக பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது