;
Athirady Tamil News

நிலாவரையில் தவிசாளர் நிரோஷிற்கு எதிரான தொல்லியல் திணைக்கள வழக்கில் சட்ட மா அதிபரின் பெற நடவடிக்கை!!!

0

நிலாவரையில் தவிசாளர் நிரோஷிற்கு எதிரான தொல்லியல்
திணைக்கள வழக்கில் சட்ட மா அதிபரின் பெற நடவடிக்கை

நிலாவரை கிணற்று பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கான ஆவணத்தினை இம் இறுதிக்குள் தயார் செய்து மன்றில் சமர்ப்பிக்குமாறு அச்சுவேலி பொலிசாருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று புதன் கிழமை (01.02.2023) காலை மல்லாகம் நீதிமன்றில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கினை முன்னொண்டு செல்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு ஏன் அனுப்பப்படவில்லை என பொலிசாரை நோக்கி நீதிபதி வினவியதுடன் இம் மதத்திற்குள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கான ஆவணத்தை தயார் செய்து பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் அத்திபாரம் போன்று வெட்டுவதற்கு இரண்டு தடவைகள் முயற்சித்த நிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். எதிர்ப்புக்களை அடுத்து அங்கு தொல்லியல் திணைக்களத்தின் முயற்சிகள் கைவிடப்பிட்டன.

பின்னர் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு தவிசாளருக்கு தொல்லியல் திணைக்களத்தின் கருமங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அதிகாரம் இல்லை என்று பொலிஸ் அதிகாரிகளால் கூறப்பட்டது. எனினும் தவிசாளர் நிலாவரையை பிரதேச சபை தொடர்ச்சியாக பராமரித்து வருகின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு உரிமையுள்ளது என வெளியேறினார். இந் நிலையில் பெருந்தொகை இளைஞர்களை கூட்டிவந்து தமது அரச கருமத்திற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தடை ஏற்படுத்தினர் எனத் தெரிவித்து மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரையில் அகழ்வு பணிகள் இடம்பெற்ற சம காலப்பகுதியிலேயே குருந்துர்மலையில் தொல்லியல் திணைக்களம் பௌத்தமயமாக்கத்தினை முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.