மைத்திரியின் ‘மன்னிப்பு’ அர்த்தமற்றது – அருட்தந்தை சிறில் காமினி!! (வீடியோ)
தான் தவறு செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளாத நிலையில், மன்னிப்பு கோருவதற்கு அவருக்கு உரிமை இல்லை என, அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையிலும் தான் தவறு செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளாத நிலையொன்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில், தவறு செய்யவில்லை என்று கூறிக்கொண்டு அதற்கு மன்னிப்பு கேட்பது அர்த்தமற்ற ஒரு சொல்லாகவே தான் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், அவ்வாறான மன்னிப்புக் கோரல் வெறும் அறிவிப்பு மாத்திரமே என்றும் அவ்வாறான மன்னிப்பு கோரல் தமக்கு தேவையில்லாத ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று(01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அருட்தந்தை சிறில் காமினி இந்த விடயத்தை தெரிவித்தார்
மன்னிப்பு கோரினார் மைத்திரி
இதேவேளை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.
கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, தனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு துயரச் சம்பவம் இடம்பெற்றமைக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.
“நான் குற்றம் செய்ததாக தீர்ப்பில் கூறப்படவில்லை, ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும். அதுதான் இந்த வழக்கிற்கும் எனக்கும் உள்ள தொடர்பு” என்று அவர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு இழப்பீடு கொடுப்பது போதுமா? பாதிக்கப்பட்டோர் நினைப்பது என்ன?
‘பயங்கரவாதி போல பார்க்கிறார்கள்’ – ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள்!!
என்னை விமர்சிப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு தார்மீக உரிமை கிடையாது – மைத்திரிபால!!