;
Athirady Tamil News

காணாமல்போன கேப்சூல் – விளைவுகளை எண்ணி அவுஸ்திரேலியாவில் பரபரப்பு – தேடுதல் பணி தீவிரம்!

0

கனிம வளங்களை எடுப்பதில் பிரபலமான அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் கதிரியக்க கேப்சூல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிய அளவிலான குறித்த கதிரியக்க கேப்சூலினை பொதுமக்கள் யாரும் எடுத்து அதனைக் கையாண்டால் அதன் தாக்கம் பெரிதளவில் இருக்கும் எனக் கூறப்படுகின்றது. இதனால், அவுஸ்திரேலியாவில் குறித்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தேடுதல் நடவடிக்கையும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

ரியோ டின்டோ எனப்படும் கன்ஸ்ட்ரக்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் டென்சிட்டி காஜ்’ (Density Guage) எனும் இயந்திரத்தை ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியிலுள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சுரங்கத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

செல்லும் வழியில் குறித்த சிறிய அளவிலான கதிரியக்க கேப்சூல் காணாமல் போயுள்ளதுடன், சுரங்கத்திற்கு டென்சிட்டி காஜ் இயந்திரம் 1,400 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இயந்திரம் பயணித்த பகுதிகளில், குறித்த நிறுவன ஊழியர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியா காவல்துறையினரும் டிடெக்டர் கொண்டு கதிரியக்க கேப்சூலைத் தேடிவருகின்றனர்.

காணாமல்போன குறித்த கேப்சூலினை மக்கள் கையாளும்போது, ‌அவர்களுக்கும், அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தோல் பாதிப்பு போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தவறுக்கு குறித்த சுரங்க நிறுவனம் மன்னிப்புக் கூறியுள்ளதுடன், இது அவுஸ்திரலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.