எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!
மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்களின் சடலங்களை எல்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பேரிலேயே அங்கு சென்று சடலங்களை மீட்டுள்ளனர்.
உயிரிழந்து காணப்பட்ட இருவரும் 70 மற்றும் 80 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.