;
Athirady Tamil News

மத்திய பட்ஜெட் 2023: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.30 லட்சமாக உயர்வு!!

0

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு: டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டிற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு 42 மத்திய சட்டங்களை மாற்றி அமைப்பதற்காக ஜன் விஷ்வாஷ் என்ற மசோதா கொண்டு வரப்படும் பசுமை எரிசக்தி துறை மேம்பாட்டிற்கு ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு லடாக்கில் உற்பத்தியாகும் பசுமை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ரூ.20,700 கோடி நிதி ஒதுக்கீடு இயற்கை உரங்களை ஊக்குவிக்க “பிஎம் பிரனாம்” என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுன்னறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும் நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திறன்படுத்தப்படுவர் சுற்றுலா மேம்பாட்டிற்காக 50 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன

பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும் 5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும் சுற்றுலாவை மேம்படுத்த யூனிட்டி மால்ஸ் என்ற பெயரில் வணிக வளாகங்கள் உருவாக்கப்படும் போக்குவரத்து துறைக்கு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக ரூ.9000 கோடி நிதி ஒதுக்கீடு வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும் பெண்களின் பெயரில் 2 ஆண்டுகள் முதலீடு செய்யும் வகையில் 7 சதவீத வட்டி வழங்கப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.