;
Athirady Tamil News

மியான்மருக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டும் சீனா!!

0

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள், ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளன. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர்.

அதை ராணுவம் ஒடுக்கியது. மியான்மர் ராணுவ ஆட்சிக்கு சீனா ஆதரவு அளித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் மியான்மர் ராணுவத்துக்கு சீனா மேலும் ராஜதந்திர ரீதியிலான மற்றும் ராணுவ உதவிகளை அளித்துள்ளதாக ஐரோப்பா ஆசியா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மியான்மரின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி 7 ஆயிரத்து 12 கைதிகளை விடுவிக்க இருப்பதாக ராணுவம் தெரிவித்தத. மேலும் இந்த ஆண்டு இறுதியில் மியான்மரில் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு ராணுவ தலைவர் மின் ஆங் தெரிவித்து இருந்தார். தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.