;
Athirady Tamil News

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி- நாள் முழுவதும் ஒத்திவைப்பு !!

0

2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை, பிரதமர் மோடி வரவேற்றார்.

இன்று காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஜனாதிபதி உரை விவாதம் நடைபெற இருந்த நிலையில் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க அனுமதி கோரினர்.

மேலும், அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் பாராளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, 2 மணியளவில் இரு அவைகளும் கூடியது. இந்நிலையில், 2 மணிக்கு பிறகும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.