உலகின் முக்கிய வல்லரசு நாட்டை அச்சுறுத்தும் டிக் டொக் செயலி?
அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள “பிளே ஸ்டோரில்” இருந்து டிக் டொக் செயலியை நீக்குமாறு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு டிக் டொக் செயலி அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை குழு உறுப்பினர் மைக்கேல் பென்னட் கூறியுள்ளார்.
சீன நிறுவனமான பைட் டான்ஸ் டிக் டொக்கை தற்போது நிர்வகித்து வருகிறது.
இதற்கமைய நாட்டின் மத்திய அரசு அமைப்புகளில் இருந்து டிக் டொக் செயலியை நீக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்கர்களின் தரவைப் பெறுவதற்கு, சீன அரசு நிறுவனங்கள் டிக் டொக் இன் தரவு அமைப்பைப் பயன்படுத்தக்கூடும் என்று சந்தேகங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.