கின்னஸ் உலக சாதனையை தன்வசப்படுத்தும் எலி! !!
பசிபிக் பாக்கெட் எலி ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
எலிகளின் ஆயுள்காலம் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளேயாகும், ஆனால் அதையும் தாண்டி ஒரு எலி கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ளது.
குறித்த உயிரியல் பூங்காவில் உள்ள எலியானது உலகில் அதிக வயதான எலி என்ற கின்னஸ் சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது.
குறித்த எலிக்கு நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் நினைவாக பாட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் 2013 ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி இந்த எலி பிறந்துள்ளதுடன், தற்போது அதன் வயது 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் ஆகிறது.
இதன் காரணமாக, உலகில் வாழ்ந்த எலிகளில் அதிக வயதுடைய எலி என்ற கின்னஸ் சாதனையை படைக்கவுள்ளது.
மனிதப் பராமரிப்பில் வாழும் பழமையான எலி என்ற கின்னஸ் உலக சாதனையும் இந்த எலி பெறும் என்று கூறப்படுகிறது.
எலியின் நீண்ட ஆயுள் சாதனையைக் கொண்டாடும் வகையில் பெப்ரவரி 8 ம் திகதி ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்யவுள்ளதாக வனவிலங்குக் கூட்டமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பசிபிக் பாக்கெட் எலி இனம் என்பது, வட அமெரிக்காவில் உள்ள எலிகளின் மிகச்சிறிய இனமாகும்.
இது தற்போது அருகிவரும் நிலையில், குறித்த மிருகக்காட்சிசாலையானது 2012 ம் ஆண்டளவில் இதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தை ஆரம்பித்தது.