ஜேர்மனியைக் கண்டு அஞ்சும் ரஷ்யா – தன் வாயாலேயே ஒப்புக்கொண்டார் புடின் !!
ரஷ்யா – உக்ரைன் போரில், ஜேர்மனியின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக உலகளாவிய ரீதியில் கருத்துக்கள் எழுந்துள்ளன.
போர் ஆரம்பித்த காலப்பகுதியில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க தயக்கம் காட்டிய ஜேர்மனி தற்போது ஆயுதங்களை வழங்க முடிவு செய்ததுமே, ”ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ்” வெளியிட்ட கருத்துக்களுக்கு அமைவாக ரஷ்யாவின் கோபத்தை சம்பாதித்துக்கொண்டுள்ளது.
ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு செய்துள்ள விடயம் ரஷ்ய அதிபர் புடினுக்கு கோபமூட்டிய நிலையில், ”நம்பமுடியவில்லை, ஆனால் உண்மை, மீண்டும் நாம் ஜேர்மன் Leopard tanks என்னும் போர் வாகனங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளோம்”. என்று கூறியுள்ளார்.
இந்த கருத்து ரஷ்யா ஜேர்மனியைக் கண்டு அஞ்சுவதை புடின் தன் வாயாலேயே ஒப்புக்கொண்டுளார் என ஒரு சில தரப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
இரண்டாம் உலகப்போரில் மோதிக்கொண்ட ரஷ்யாவும் ஜேர்மனியும் ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்த காலத்தில், இறுதி நேரத்தில், Battle of Stalingrad என்றொரு முக்கியத்துவம் வாய்ந்த போரை சந்தித்தது.
அதில் சோவியத் யூனியனும் ஜேர்மனியும் மோதிக்கொண்டன. ஜேர்மனி போரில் தோல்வியை சந்தித்தது. அந்தப் போரில் சுமார் ஒரு மில்லியன்பேர் கொல்லப்பட்டார்கள். சுமார் 91,000 ஜேர்மன் வீரர்கள் சோவியத் யூனியனிடம் சிக்கிக்கொண்டார்கள்.
போருக்கே ஒரு திருப்புமுனை
அது இரண்டாம் உலகப் போருக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த போரில் ஜேர்மனியர்களின் போர் வாகனங்களை சந்தித்ததைத்தான் இப்போது புடின் மேற்கோள் காட்டுகிறார் என கூறப்படுகின்றது.
அதைத்தான் புடின் ”நாம் மீண்டும் ஜேர்மன் போர் வாகனங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளோம்” என்று ரஷ்ய தரப்புக்கள் கூறுகின்றன.
இதற்கமைய அவர் அச்சத்தில் கூறுகிறாரா அல்லது ஜேர்மனியின் தோல்வியைக் குத்திக்காட்டும் வகையில் கூறுகிறாரா என்பது தற்போது ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது.