பால் குடியுங்கள்.. மதுபானக் கடைகளுக்கு முன்பு மாடுகளை கட்டி பிரச்சாரம் செய்த உமா பாரதி!!
பாஜக ஆளும் மாநிலத்தில் மது விற்பனைக்கும் அருந்துவதற்கும் எதிரான பிரச்சாரத்தை மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதி மேற்கொண்டுள்ளார். அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன்பு சாலைகளில் திரிந்த மாடுகளை இழுத்து கட்டி அதற்கு வைக்கோல் ஊட்டினார்.
பின்னர், பசும்பால் குடிக்கவும், மதுவைத் தவிர்க்கவும் என்று மதுவிற்கு எதிராக கோஷம் எழுப்பினார். கோவில்களுக்கும், அரண்மனைகளுக்கும் பெயர் பெற்ற நிவாரி மாவட்டத்தில் உள்ள ஓர்ச்சா நகரத்தில் மதுபானம் விற்கும் கடையின் முன் நின்று, பசுக்களைக் கட்டிவிட்டு, “பசும்பால் குடிக்கவும்..
மதுவை தவிர்க்கவும்” என்ற பிரசாரத்தை மேற்கொண்டார். மேலும் அவர், குடிப்பழக்கத்தை அரசாங்கம் பணமாக்கக் கூடாது என்றும் கூறினார். மது விற்பனைக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மதுபானக் கடையில் பாஜக தலைவர் மாட்டுச் சாணத்தை வீசினார். மார்ச் 2022ல், போபாலில் உள்ள ஒரு மதுபானக் கடை மீது கல் எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.