அரச அதிகாரிகளுக்கான உத்தரவு தேர்தலுக்கு பாதிப்பாக அமையும் – பெப்ரல் அமைப்பு ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பு !!
கடன் அடிப்படையில் வேலைகளை மேற்கொள்ளவேண்டாம் என அரச அதிகாரிகளுக்கு விடுத்திருக்கும் உத்தரவு உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடவடிக்கைக்கு தடையாக அமையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால் இந்த அறிவிப்பு வாக்களிப்பு முடியும்வரை, தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுந்தாது என அறிவிக்க வேண்டும் பெப்ரல் அமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளது
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற தேர்தல்களில் அரசியல் கட்சி மற்றும் மக்கள் மத்தியில் அதிக அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள தேர்தல் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பாகும். இதற்கு நாட்டுக்குள் இருக்கும் பொருளாதார பிரச்சினையும் அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அரச தரப்பினரால் அடிக்கடி தெரிவிக்கப்படும் அறிப்புகள் காரணம் என்பது இரகசியமானதல்ல.
தற்போதும் அரச தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அறிவிப்புக்கள் ஊடாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஓரளவு பாதிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. அது கடன் அடிப்படையில் வேலைகளை மேற்கொள்ளவேண்டாம் என நீங்கள் அரச நிறுவனங்களுக்கு ஆலாேசனை வழங்கி இருப்பதாகும்.
அதேநேரம் அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரச அதிகாரிகள் அதற்கு தனிப்பட்ட முறையில் பாெறுப்புக்கூற வேண்டும் என தெரிவிப்பதன் ஊடாக, அரச நிறுவனங்கள் தேர்தல் ஒன்றின் போது சாதாரணமாக மேற்கொள்ளும் மீள செலுத்தும் செலவு செயற்பாடுகளுக்கு தடைகள் ஏற்படலாம்.
அதனால் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் அரச நிறுவங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் இவ்வாறான கட்டளை, வாக்களிப்பு முடியும்வரை, தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுந்தாது என அறிவிக்க வேண்டும் எனவும் இதன் பிறகு இதன்னுடன் தொடர்பாக விடுக்கப்படும் சுற்று நிருபங்கள் ஊடாக இந்த விடயங்களை தெளிவாக உள்ளடக்குமாறும் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
நாட்டுக்குள் பாரிய பொருளாதார பிரச்சினை இருப்பதை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். என்றாலும் அதனை காணமாக்கொண்டு மக்களின் வாக்குரிமைக்கு தடங்களை ஏற்படு்த்துவது அல்லது பறித்துக்கொள்வது ஜஜனநாயகத்தை மதிக்கின்ற எந்த தலைவரும் செய்யக்கூடாத நடவடிக்கையாகும். உங்களைப்போன்ற தலைவர் அவ்வாறு செயற்படாது என நாங்கள் நம்புவோம்.
அத்துடன் அரசியலமைப்பின் 33ஆவது (ஏ) யாப்பின் பிரகாரம் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு பொருத்தமான சூழலை ஏற்படுத்துவது மற்றும் உறுதிப்படுத்துவது ஜனாதிபதி என்றவகையில் உங்களின் பொறுப்பாகும். அதேநேரம் அவ்வாறு செயற்படுவதன் மூலம் உங்களுக்கு தேசிய மற்றும் சர்வதேசத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு காரணமாவதுடன் அதன் நம்பிக்கையை பெருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு இலகுவாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.