வியாழன் கிரகத்தின் நிலவுகளின் எண்ணிக்கை 92 ஆக உயர்வு!!
சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள் உள்ளது. மேலும் 5 குறுங்கோள்களும் உள்ளன. ஒவ்வொரு கோள்களுக்கும் நிலவுகள் உள்ளது. பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ளது. சனி கிரகத்துக்கு 83 நிலவுகள் இருக்கிறது. அதேபோல் வியாழனுக்கு 80 நிலவும், யுரேனுக்கு 27, நெப்டியூனுக்கு 14, செவ்வாய் கிரகத்துக்கு இரண்டு நிலவுகள் உள்ளன.
வெள்ளி மற்றும் புதன் ஆகிய கிரகங்களுக்கு நிலவு கிடையாது. இந்த நிலையில் வியாழன் கிரகத்தை சுற்றி 12 புதிய நிலவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் வியாழன் கிரகத்தின் நிலவுகள் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகள் கொண்ட கிரகமாக வியாழன் வந்துள்ளது. சனி கிரகம் உறுதிப்படுத்தப்பட்ட 83 நிலவுகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
இது தொடர்பாக விஞ்ஞானி ஸ்காட் ஷெப்பர்ட் கூறும்போது, 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் ஹவாய் மற்றும் சிலியில் தொலைநோக்கிகளை பயன்படுத்தி இந்த புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதிய நிலவுகள் 0.6 மைல் முதல் 2 மைல் அளவில் இருக்கும். எதிர்காலத்தில் இந்த வெளிப்புற நிலவுகளில் ஒன்றை நெருக்கமாக படம் பிடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். வியாழன் மற்றும் சனி ஆகியவை சிறிய நிலவுகளால் நிரம்பி உள்ளன என்றார்.