;
Athirady Tamil News

இலங்கைக்கான எமது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் நாம் உறுதிப்படுத்துகின்றோம் – சுதந்திரதின வாழ்த்தில் அமெரிக்கத் தூதுவர்!!

0

இலங்கையின் 75 ஆவது சுதந்திரத்தினம் மற்றும் அமெரிக்காவுடனான 75 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளின் இந்த முக்கியமான தருணத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கை மக்களுக்கும் நான் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனதுசுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் காணொளி மூலம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அமெரிக்க மக்கள் மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் எனது சக ஊழியர்கள் சார்பாக இலங்கையின் சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு மற்றும் எமக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிக்கும் இந்த முக்கியமான தருணத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், வர்த்தகத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ பசுபிக் பிராந்தியத்தைப் பராமரித்தல் போன்ற பரஸ்பர இலக்குகளை நோக்கி பல தசாப்தப்ஙகளாக எமது இரு நாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன.

இந்த சவாலான காலங்களில், விவசாயிகளுக்கான உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, சிறு வணிகங்களுக்கான கடன்கள் போன்ற 240 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடைய புதிய உதவிகளை வழங்கி கடந்த வருடம் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக நின்றது.

இலங்கையின் பங்காண்மை மற்றும் இலங்கை மக்களின் மீள்தன்மை ஆகியவற்றை நாங்கள் மதிப்பதுடன், வலுவான ஜனநாயகம், நிலையான பொருளாதாரம் மற்றும் குடிமக்களது தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நல்லாட்சி ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான அதன் சீர்திருத்த முயற்சிகள் உட்பட தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்காக நாடு தொடர்ந்தும் அடைந்துவரும் முன்னேற்றத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.

எமது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் நாம் உறுதிப்படுத்துகின்றோம். அத்துடன் மக்களுக்கான, முன்னேற்றத்திற்கான பங்காண்மையினை மேலும் பல ஆண்டுகாலம் தொடர்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.