கனேடிய லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய ஜாக்பொட்டை வென்ற இளையவர் !!
கனேடிய லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய ஜாக்பொட்டை இளையவர் ஒருவர் தனதாக்கியுள்ளார்.
வடக்கு ஒன்றாரியோவைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் $48 மில்லியன் பெறுமதியான லோட்டோ ஜாக்பொட்டை வென்றுள்ளார்.
அவர் வாங்கிய முதல் டிக்கெட்டிலேயே இந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
பரிசு வென்ற பெண் கூறுகையில், “எனக்கு 18 வயதாகிறது, என் தாத்தா வேடிக்கைக்காக ஒரு லொட்டரி சீட்டை வாங்க பரிந்துரைத்தார்.
நான் கடைக்குச் சென்றபோது, இதற்கு முன் டிக்கெட் வாங்காததால் என்ன கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் என் அப்பாவை அழைத்த போது, அவர் லோட்டோ 6/49 லொட்டரி சீட்டை வாங்கச் சொன்னார்.
என்னுடைய முதல் லொட்டரி சீட்டில் கோல்ட் பால் ஜாக்பொட் அடித்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை!” என்றார்.
குறித்த லொட்டரியில் 18 வயது இளைஞர்கள் இதற்கு முன் வெற்றி பெற்றிருந்தாலும், கனேடிய லொட்டரி வரலாற்றில் இவ்வளவு பெரிய பரிசை வென்ற இளையவர் இவர் தான் என்று கூறப்படுகிறது.