விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்!!
மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை நீக்க மறுத்த விக்கிபிடியா இணையதளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.
இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபிடியா உலகில் உள்ள பல்வேறு துறை நிபுணர்களால் கருத்துகள் உருவாக்கப்பட்டு, கருத்துகள் பதிவிடப்பட்டு, திருத்தப்பட்டு விக்கிமீடியா என்ற அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானில் மத, கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பவர்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இணையதள தேடுதல் களஞ்சியமான விக்கிபிடியாவில், இஸ்லாமிய மத, கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிரான அவதூறு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், மதநிந்தனை தொடர்பான அந்த பதிவுகளை 48 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தானின் உத்தரவை விக்கிபிடியா செயல்படுத்தவில்லை. இதையடுத்து விக்கிபிடியா இணையதளத்தை பாகிஸ்தான் அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.