மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி!!
மேகாலாயாவில் இந்த மாதம் 27ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு ஆளும் தேசிய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை முதல்வர் கான்ராட் கே சங்மா வெளியிட்டார். இதனை தொடர்ந்து முதல்வர் சங்மா கூறுகையில்,‘‘ தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கிராம மற்றும் நகர்புறங்களில் தொழில்முனைவோர், சுற்றுலா, டிஜிட்டல், வேளாண் செயலாக்கம் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்கும் வகையில் மலிவு விலை மருந்தகங்கள் விரிவுபடுத்தப்படும்” என்றார். இதற்கிடையே மேற்கு ஷில்லாங் தொகுதியில் போட்டியிடும் ஆளும் கூட்டணி வேட்பாளர் மோகிந்ரோ ராப்சாங், காங்கிரஸ் வேட்பாளர் பால் லிங்டோ ஆகியோர் வாக்காளர்களுக்கு இலவசமாக குக்கர், பவுல் செட் வழங்கியது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.