ரஷ்யாவின் அடுத்த இலக்கு இந்த நாடு தான்! வெளியான அதிர்ச்சி தகவல் !!
உக்ரைனை தொடர்ந்து ரஷ்யா இலக்கு வைத்துள்ள நாடு தொடர்பில் மறைமுகமான செய்தியை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய – உக்ரைன் போர் முடிவுக்கு வருமா வராதா என உலகம் குழப்பத்துடன் காத்திருக்கும் இந்த சூழ்நிலையில் ரஷ்யா இன்னொரு நாட்டைத் தாக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியுறவுற அமைச்சரின் தகவல்
சிறிது காலமாக காணாமல் போன ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergey Lavrov வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றின் நேர்காணலில் அவர் கலந்துக்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் தனது உடல் நிலை குறித்து வெளியாகிவரும் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். மேலும் உக்ரைன் போர் முடியுமா என உலகம் காத்திருக்கும் நிலையில், அடுத்த இலக்கை தேர்ந்தெடுத்துவிட்டோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergey Lavrov கூறியுள்ளார்.
எப்படி உக்ரைனில் ரஷ்யா ஆதரவு பகுதியான டான்பாஸ் என்று ஒன்று உள்ளதோ, அதேபோல மால்டோவாவிலும் சர்ச்சைக்குரிய Transnistria என்றொரு பகுதி உள்ளது.
அதற்கு ரஷ்ய ஆதரவு உள்ள நிலையில், கிரீமியாவைப்போலவே இந்த Transnistriaவும் ரஷ்யாவுடன் இணைக்கப்படுமா என்ற ஒரு கேள்வி நிலவி வருகிறது.
எனவே அதைக் காரணமாக வைத்து ரஷ்யா பிரச்சினை ஏற்படுத்தலாம் என்பது ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergey Lavrovவின் பேச்சிலிருந்து தெரியவந்துள்ளது.
மால்டோவாவைத் தாக்கப்போகிறோம் என அவர் நேரடியாகக் கூறவில்லை என்றாலும், அடுத்த உக்ரைன் மால்டோவாதான் என அவர் தெளிவாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.