மோட்டார் சைக்கிள் மீது உரசியதால் ஆத்திரம் தனியார் பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய போலீஸ்காரர்!!
வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக சிவராந்தகம் பகுதியை சேர்ந்த பழனி பணியாற்றி வருகிறார். இவர் சக போலீஸ்காரருடன் மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் பகுதியில் ரோந்து சென்றார். மாடவீதி சந்திப்பில் சென்ற போது திருக்கனூரில் இருந்து வில்லியனூர் வழியாக புதுவைக்கு வந்த தனியார் பஸ் போலீஸ்காரர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் அவர்கள் கீழே விழுந்தனர்.
இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் பழனி பஸ்சில் ஏறி வந்து டிரைவரை ஹெல்மெட் மற்றும் கையால் தாக்கினார். இந்த காட்சி பஸ்சில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பஸ் டிரைவர் மீது தவறு இருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்து வேண்டுமே தவிர அவரை போலீஸ்காரர் ஹெல்மெட்டால் தாக்குவதும், அது தொடர்பாக வெளியான சி.சி.டி.வி. வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ்காரர் தாக்கியதில் லேசான காயமடைந்த பஸ் டிரைவர் ஆஸ்பத்திரில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.