கொழும்பு சிற்றூழியர் கசிப்புடன் கைது!!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்களில் ஒருவர், போயா தினமான நேற்று (05) கசிப்பு விற்றுக்கொண்டிருந்த நிலையில், புளத்சிங்கள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 20 கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புளத்சிங்கள மற்றும் மஹரகம ஆகிய வைத்தியசாலைகளில் சிற்றூழியராக பணியாற்றிய இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிற்றூழியராக தற்போது பணியாற்றுகின்றார்.
58 வயதான சந்தேகநபர், நீண்ட நாட்களாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுள்ளார். பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலுக்குப் பின்னரும் விடுமுறை நாட்களிலும் அவர், கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவருகின்றார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டின் நான்கு பக்கங்களிலும் பாதுகாப்பு கமெராக்களை பொருத்தி, மிகவும் பாதுகாப்பான முறையில், திட்டமிட்டு கசிப்பு விற்பனைச் செய்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
விற்பனைக்குத் தயார் செய்யப்பட்டிருந்த கசிப்பு பக்கெற்றுகள், வீட்டிலுள்ள சுடுநீர் போத்தலுக்குள் மறைத்து வைத்திருந்தார் என்பதுடன், வீட்டுக்கு பின்பக்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு பெரல் ஒன்றும் மீட்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.