சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு!!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாண தலைநகர் சாங்ஷாவில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் வழக்கம்போல் சென்றுக்கொண்டிருந்தது. எப்போதும் பரபரப்புடன், நெரிசல் மிகுந்து காணப்படும் இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒன்றோடு மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பல வாகனங்கள் தீப்பிடித்து எறிந்துள்ளது. சாலையில் வாகனம் நெரிசல் காணப்பட்டதால் வாகனங்களில் இருந்து வெளியேற முடியாமல் தீயில் கருகியும், சிலர் உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்தில் கார், லாரிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ச்சியாக மோதியுள்ளது. தொடர்ச்சியாக மோதியதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.