ஈராக் நாட்டில் பிரபல பெண் யூடியூபர் கவுரவக் கொலை: நீதி கேட்டு மக்கள் போராட்டம் !!
ஈராக் நாட்டில் புகழின் உச்சியில் இருந்த பெண் யூடியூபரை அவரது தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ளது. ஈராக் நாட்டின் தெற்கு மாகாணத்தில் உள்ள திவானியா என்ற இடத்தை சேர்ந்த டிபா அல்அலி என்ற 22 வயது பெண். சமூக வலைத்தளத்தில் பிரபலமடைந்து பலரது ஆதரவை பெற்றார். அவருக்கு அண்டை நாடுகளில் ரசிகர்கள் பெருகியதால் துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
துருக்கியை சேர்ந்த ரசிகர் ஒருவருடன் காதல் கொண்ட டிபா அல்அலி சிறிது காலம் துருக்கி சென்று வாழ்ந்துள்ளார். இந்நிலையில் உறவினர்கள் அழைத்ததால் சொந்த ஊர் திரும்பியவர் தனது தந்தையை சந்தித்துள்ளார். அப்போது டிபா அல்அலியுடன் அவரது தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மகளின் கழுத்தை நெரித்து கொலையும் செய்துள்ளார். இது ஒரு கவுரவக்கொலை என்று ஈராக் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. மரணத்திற்கு பிறகு டிபா அல்அலி விடீயோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.