ஓட்டோவில் சென்று பிரசாரத்தை ஆரம்பித்த இ.தொ.கா!!
இரத்தினபுரி- ஹெரமிட்டிகல பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்காகச் சென்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர், ஓட்டோவில் சென்று மக்களை சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஹெரமிட்டிகல தோட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு செல்வதற்கு ஒருசில மணிநேரங்களுக்கு முன்னதாக குறித்த தோட்டத்திற்கு அண்மையில் உள்ள கிராமத்தை சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் குறித்த பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்காக பாதையை உடைத்து, வாகனம் செல்ல தடைசெய்ததாகவும் அதனை முறியடித்து
வெற்றிகரமாக மக்கள் சந்திப்பை நடத்தியதாகவும் இ.தொ.கா அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இ.தொ.கா, எம் மக்களை சந்திப்பதற்கு எந்தவித தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாம் ஒருபோதும் அஞ்சியது கிடையாது.
எமது பிரசாரத்தை தடுக்க எடுத்த முயற்சிகளை தோற்கடித்து, ஓட்டோவொன்றை வரவழைத்து, மக்களை சென்று சந்தித்ததுடன் கடந்தகாலத்தைவிட எதிர்காலத்தில் அதிகமான சேவைகளை இ.தொ.கா முன்னெடுக்குமென மக்களிடம் தெரிவித்தோம் எனவும் இதொகா கூறியுள்ளது.