;
Athirady Tamil News

‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ இந்தியாவே இலக்கு!!

0

பாகிஸ்தான் பெப்ரவரி 5-ம் திததியை காஷ்மீர் ஒற்றுமை தினம் என்று அனுசரித்து வருகிறது.

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தினம் பாகிஸ்தானில் அனுசரிக்கப்படுகிறது.

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று பாகிஸ்தான் இந்த தினத்தை அனுசரிக்கிறது.

இந்த தினத்தில் பாகிஸ்தானில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ என கூறி இந்திய அரசுக்கு களங்கம் விளைவிக்க பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள சதித்திட்டம் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறை தகவலின்படி, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளிநாடுகளில் உள்ள (இந்தியா தவிர) தங்கள் நாட்டின் தூதரகங்களுக்கு இரகசிய தகவல் அனுப்பியுள்ளது.

அதில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பாக். வெளியுறவுத்துறை தூதரகங்கள் இன்று காஷ்மீர் ஒற்றுமை தினம் தொடர்பாக அறிக்கை, டுவிட்டரில் பதிவுகள் பதிவிடவேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தூதரகங்களுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், பல்வேறு நாடுகளில் பாகிஸ்தான் தூதரகங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினம் என கூறி இந்தியா மற்றும் இந்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இதனை வன்மையாக கண்டித்துள்ள இந்திய தரப்புகள் ஜம்மு – காஷ்மீரின் வளர்ச்சியை தடுக்க வேண்டாம் என கோரி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் 2019ஆம் ஆண்டு 370 மற்றும் 35ஏ சட்டங்கள் இரத்து செய்யப்பட்ட பிறகு, இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக நிபுணத்துவ அறிக்கைகள் சுட்டிக்காட்டின.

மூன்று தசாப்தங்களாக, ஸ்ரீநகர் பெருநகர் காஷ்மீரின் கிளர்ச்சியின் மையமாக இருந்தது. மத்திய அரசின் நடவடிக்கைகளினால் அந்த நிலைமை மாறியுள்ளது.

காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள அறிக்கைகள், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமாக அந்த பகுதிகள் அமையலாம் என்பதை குறிப்பிட்டுள்ளன.

ஆனால் ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் இலக்குகளுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துள்ளதாகவும், சுற்றுலாப்பயணிகள் படிப்படியாக பிரபலமான பகுதிகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

காஷ்மீர் முன்னர் வன்முறையைத் தொடர்வதை இலக்காக கொண்டிருந்தது. ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து 370இன் கீழ் வழங்கப்பட்டதை இரத்து செய்து, அப்பகுதியை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தது.

இதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் படிப்படியான நிலையான அமைதி மற்றும் வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆனால் காஷ்மீர் ஒற்றுமை தினமென கூறி இந்தியாவை களங்கப்படுத்தும் வகையில் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.