ரெயில் பயணிகள் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி – விரைவில் அமலாகிறது!!
ரெயில் பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் உணவுகளை தயார் செய்து வழங்கி வருகிறது. இதற்காக தனி இணைய தளம் மற்றும் செல்போன் செயலி உள்ளது. இந்த வரிசையில் வாட்ஸ்அப் மூலமும் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரெயில்வே அறிமுகம் செய்கிறது. இதை 2 கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில குறிப்பிட்ட வழித்தடங்களில் ஏற்கனவே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து தடங்களிலும் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி விரைவில் அமல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரெயில்களில் இ-கேட்டரிங் சேவைகளுக்கான வாட்ஸ்அப் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் கருத்து மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மற்ற ரெயில்களிலும் இது அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.