துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி!!
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க (கரைகடந்த கம்பனிகளைப் பதிவு செய்தல்) ஒழுங்குவிதிகள், 2022.11.17 திகதிய 2306/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.