ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சட்டத்தில் திருத்தம்!!
1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அக்ரஹார தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்திற்கு சமமான சுகாதாரக் காப்பீட்டு முறையொன்றை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவதற்கான முன்மொழிவொன்று 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.