ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிவிப்பு !!
ஜனாதிபதி தலைமையில் நடைபெற உள்ள ஓன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்வுகளை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒத்திவைத்துள்ளார். 6 மாதங்களுக்குள் ஜனாதிபதி ஏன் இருமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளார்? இதனால், பாராளுமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் ஜனாதிபதியால் இரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
எனவே, பாராளுமன்ற கூட்டதொடரை ஒத்திவைத்துவிட்டு பாராளுமன்றத்துக்கு வந்து ஜனாதிபதியால் என்ன உரையாற்ற முடியும்? நாட்டின் எதிர்காலம் மோசமாக இருக்கும் என்றே வழமைப்போல கூற முடியும். வேறு எதனையும் கூற முடியாது. பாராளுமன்ற புதியக் கூட்டத்தொடர் நாளை ஆரம்பிக்கும்போது ஐக்கிய மக்கள் சக்தி அதனைப் புறக்கணிக்கும் எனவும் தெரிவித்தார்.