;
Athirady Tamil News

அக்கிராசன உரை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கும் எதிர்க்கட்சித் தலைவர்!!

0

login-icon

முகப்பு
Local
அக்கிராசன உரை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கும் எதிர்க்கட்சித் தலைவர்
அக்கிராசன உரை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கும் எதிர்க்கட்சித் தலைவர்
By T. SARANYA
08 FEB, 2023 | 04:48 PM
image
நாட்டை அழித்து நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ஷர்களைப் பாதுகாக்கும் யானை மொட்டு கூட்டணியை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும் எனவும், அதுமட்டுமல்லாமல், இந்நாட்களில் பணம் செலவிட்டு சமூகஊடகங்களில் போலியான அலைகளை உருவாக்கி மக்களை ஏமாற்ற மற்றுமொரு குழு செயற்பட்டுவருவதாகவும், அவர்கள் குறித்தும் மக்கள் கவனம் செலுத்தி குறித்த அலைகளுக்கு மக்கள் ஏமாறாமல் இருக்குமாறும் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நேற்று(07) கேகாலையில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் மீதான தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு எதிராகவே பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரையை தாம் புறக்கணித்ததாக தெரிவித்த அவர், மக்கள் வாழ்வை அழிக்கும் அக்கிராசன உரைகளுக்கு ஏமாறாமல் மக்களின் வாழ்வை அழிக்கும் இந்த ஆட்சிக்கு எதிராக விரைவில் மக்கள் அலையுடன் கொழும்பு வரவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும், வரிக்கு மேல் வரி விதிக்க வேண்டாம் எனவும், மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டாமெனவுமே யானை மொட்டு அரசாங்கத்திடம்கூறிக்கொள்வதாகவும், இந்த யானை மொட்டு அரசாங்கத்தை விரட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும்ராஜபக்சவின் அடிமைகளாக மாறிய 220 இலட்சம் மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர் எனவும்,இதுபோன்றதருணத்தில்,மக்கள் மீண்டும் 2019 ஆம் ஆண்டைப் போல போலிகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும்,சமூகஊடகங்கள் மூலம் செயற்கையாக உருவாக்கப்படும் சமூக ஊடக அலைகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் வாழவைக்கும் பொது யுகத்துக்கான ஆணையை வழங்குமாறுகோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் அவதானத்தைத் திசை திருப்பி மார்ச் 9 தேர்தலை நடத்தாதிருக்க முயற்சிக்கின்றனர்என்பதனால்,அக்கிராசன உரையையோ, பாராளுமன்ற விவாதங்களையோ பற்றி சிந்திக்காமல் ஐக்கிய மக்கள்சக்தி மக்களின் வாக்குரிமைக்காக முன்நின்று மார்ச் 9 ஆம் திகதிக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.