நிலநடுக்க இடிபாடுகளுக்குள் 17 மணிநேரமாக தனது தம்பியை பாதுகாத்த சிறுமி!! (VIDEO)
துருக்கி மற்றும் சிரியாவில் பல நிலநடுக்கங்களால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்புகள் கவலையை ஏற்படுத்துவதற்கு மத்தியில், சிரியாவில் இடிபாடுகளுக்குள் 7 வயது சிரிய சிறுமி தனது தம்பியை பாதுகாக்கும் புகைப்படம் தற்போது வலைதளங்களில் பரவி வருகின்றது.
துருக்கி மற்றும் சிரியாவில் 5.5 முதல் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பல நிலநடுக்கங்களில் 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உட்பட பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிரியாவில் 7 வயது சிறுமி, இடிபாடுகளுக்கு அடியில் தனது சகோதரனை பாதுகாத்து வைத்திருந்த புகைப்படம் மற்றும் காணொளி வேகமாக பரவி வருகின்றது.
மீட்புக்காக காத்திருக்கும் சிறுமி, தன் சகோதரனைப் பாதுகாப்பதற்காக அவனது தலையில் கையை வைத்திருக்கிறாள்.
செவ்வாயன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி முகமது சஃபா, குறித்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார். இருவரும் 17 மணி நேரம் இடிபாடுகளுக்கு அடியில் இருந்ததாகவும், பாதுகாப்பாக வெளியேறியதாகவும் குறித்த பதிவில் மேலும் தெரிவித்திருந்தார்.
குறித்த காணொளியில் சிறுமி தனது சகோதரனின் தலையில் கையை வைத்து, அவனை மார்போடு அணைத்து, ஒரு துணை மருத்துவரிடம் பேசுவதைக் காட்டுகிறது.
அந்தச் சிறுமி துணை மருத்துவரிடம், “மாமா, என்னை வெளியே இழுங்கள், நீங்கள் என்ன கேட்டாலும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காராக இருப்பேன்” என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியின் பேரழிவை இந்தியாவும் சந்திக்கும் – எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர்..!
துருக்கி நில அதிர்வு -பிரபல கால்பந்து வீரர் சடலமாக மீட்பு !!
நிலநடுக்க பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது… பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட துருக்கி அதிபர்!!
துருக்கியின் நூர்தாகி பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு!!