தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாக வ. கா.ஆ. உ. ச. தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவிப்பு!! (படங்கள்)
முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
தனது இயலாத மகனை திட்டமிட்டு கைது செய்து தன்னை பழிவாங்க முற்படுவதோடு தன்னை போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முனைவதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையில்,
இலங்கையினுடைய 75 வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக தெரிவித்து தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறையை நிறுத்த கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி என்ற போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த சமயத்தில் கடந்த 6 ஆம் திகதி திருகோணமலையில் அவர் பேரணியில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய மகன் வீடு ஒன்றை உடைத்து வீட்டினுள் களவாட சென்றதாக தெரிவித்து மகனை தேடி தனது வீடு புகுந்து பொலிசார் தேடிவருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலை அடுத்து அவர் போராட்டத்தில் இருந்து முல்லைதீவுக்கு வருகை தந்ததாகவும் தனது இரண்டாவது மகன் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவராக காணப்படுவதோடு அவர் வேறு நபர்களின் தூண்டுதல்களுக்கு உள்ளாக கூடிய நிலைமை இருக்கின்ற வகையிலே தான் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயம் பார்த்து வீட்டில் நான் இல்லை என அறிந்து அரச புலனாய்வாளர்கள் மற்றும் பொலிசாரின் திட்டமிட்ட செயலாக அவருக்கு போதைப்பொருள் அல்லது வேறு ஏதேனும் கொடுத்து அருகில் இருந்த வீடு ஒன்றுக்குள் செல்லுமாறு பணித்து வீடு பூந்து களவு எடுத்த வகையில் ஒரு வழக்கை தொடர்வதற்காக திட்டமிட்டு முல்லைத்தீவு போலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக மரிய சுரேஷ் ஈஸ்வரி குற்றம் சுமத்தியுள்ளார்.
தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிக்குள் தன்னுடைய மகன் அத்து மீறி நுழைந்ததாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் அந்த வீட்டுக்காரர் முறைப்பாடு செய்ததாக தெரிவித்து மகனை காணவில்லை எனவும் மகனை தேடுவதாக தெரிவித்து நான் வீட்டில் இல்லாத நேரம் 15 வரையான பொலிசார் தனது வீட்டுக்கு வந்து வீட்டிலிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினுடைய விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் பார்வையிட்டு சோதனையிட்டுள்ளனர்.
இவரை பல்வேறு தடவைகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பொலிசார் எச்சரித்திருந்ததும் அதனை மீறி தான் போராட்டத்தில் ஈடுபட்டதை பழிவாங்கும் நிலையிலே பொலிசார் புலனாய்வாளர்கள் இணைந்து திட்டமிட்டு குறித்த செயற்பாட்டை நிறைவேற்றியுள்ளதாக மரிய சுரேஷ்வரி குற்றம் சுமத்தியுள்ளார்
குறிப்பாக வடக்கு கிழக்கிலே இடம்பெறுகின்ற பல்வேறு போராட்டங்களில் தான் கலந்து கொள்கின்ற போது தன்னை போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் தடுப்பதற்காக முல்லைத்தீவு பொலிசார் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டதாகவும் அவை அனைத்தையும் மீறி தான் அந்த விடயங்களில் முன்னெடுத்துச் செல்வதால் தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் தொடர்ச்சியாக பொலிசார் செயற்பட்டு வந்ததாகவும் தான் இல்லாத நேரம் பார்த்து இவ்வாறான ஒரு செயற்பாட்டை செய்துள்ளார்கள் எனவும் இவ்வாறான நிலையில் மகன் அந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலைமையிலே மகன் யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய உறவினர்களின் வீட்டுக்கு சென்ற நிலையில் மகனை இன்று காலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அழைத்து வந்தேன்
முறைப்பாடு செய்ததாக தெரிவித்த வீட்டில் உரிமையாளர்களும் இது ஒரு பிரச்சனை இல்லை எனவும் மகனை காணவில்லை ஏதாவது செய்தாலும் என்ற பயத்தினாலேயே தாம் பொலிசில் தெரிவித்ததாகவும் அதை சமரசமாக முடிப்பதாகவும் தெரிவித்தும் இன்று காலையில் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தன்னுடைய மகனை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.
குறிப்பாக காலை வேளையிலே (8.40) மகனை கைது செய்திருந்த போதும் மாலை 3 மணி வரை கைது செய்தமைக்காக வழங்கப்படும் பத்திரத்தை கூட பொலிசார் வழங்கவில்லை எனவும் தான் சண்டையிட்டு அந்த பத்திரத்தை பெற்றுக் கொண்டதாகவும் தன்னை பழி வாங்குவதற்காகவே திட்டமிட்டு பொலிசார் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்
காலையில் மகன் பொலிஸ் நிலையம் சென்றும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது நாளை வரை பொலிசில் தடுத்து வைத்திருப்பதாகவும் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்ச்சியாக நீங்கள் போராட்டங்களுக்கு நிதிகளுக்காக செல்கின்றீர்கள் உங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகின்றது என பல்வேறு வகைகளில் தன்னை தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்ததாகவும் இன்றைய நிலையில் இவ்வாறு திட்டமிட்டு செய்திருக்கின்ற நிலைமையில் இவர்களுடைய இந்த செயற்பாடு தொடர்பில் அதிருப்தி வெளியிட்டதோடு தாங்கள் ஏதாவது தற்கொலை முயற்சிகள் செய்தால் கூட இவர்களுடைய அழுத்தங்களும் இவருடைய தாக்கத்தினாலே தாங்கள் இந்த முடிவை எடுக்க நேரிடும் எனவும் எனவே சம்பந்தப்பட்ட மனித உரிமை சார்ந்த மற்றும் இலங்கையில் உள்ள தூதரகங்கள் அனைவரையும் இந்த விடயத்தில் உடனடியாக தொடர்பு கொண்டு தனக்கு நீதி பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறும் தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்
குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”