மலையக மக்கள் ஊறுகாய் அல்ல !!
தேர்தல் காலங்களில் மட்டும்ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு மலையக மக்களின் துயரங்கள் கண்ணெதிரே தோன்றுவது வேடிக்கையானது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ், பெருந்தோட்டம் மலையக மக்கள் ஊறுகாய் அல்ல என்றும் நினைவூட்டினார்.
மடுல்சீமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார மக்கள் கூட்டத்தின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தீர்மானம் மிக்க இந்த தேர்தலில் மக்கள் மிக அவதானமாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் நம் நாட்டை பாதாளத்தில் தள்ளிய ஒரு சில அரசியல் கட்சிகள் புதிய புதிய சின்னங்களில் ஓட்டுக்களை சிதறடித்த சூழ்ச்சிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உங்களில் ஒருவரை உங்களுக்காக தேர்ந்தெடுங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் என்னுடைய பசறை தேர்தல் தொகுதியில் மலையக இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை அளித்துள்ளேன் என்னுடைய உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ அங்கே இடம் கிடையாது என்றார்.
பாராளுமன்றத்தில் இன்று வரை மலையக மக்களின் காணி உரிமை வீட்டு உரிமை வாழ்வாதார உரிமை தொடர்பில் மும்மொழிகளிலும் எடுத்துரைத்துள்ளேன். அமைச்சு பொறுப்புகளில் பதவி வகித்த போது பெருந்தோட்ட மலையக மக்களின் நலனுக்காக பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்திருந்தேன் என்றார்.
இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து இருநூறு வருடங்கள் கடந்துள்ளது இருந்தபோதிலும் எதுவிட உரிமைகளும் சலுகைகளும் இன்றி பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு தாரை வார்த்து ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மலையகம் 200 இவற்றையெல்லாம் மாற்றி புதியதொரு வரலாறு எழுத வேண்டும்.அதற்கு உங்களுடைய வாக்கு பலத்தை பயன்படுத்துங்கள் என்றார்.