இந்தியாவில் இருந்து விண்ணப்பித்தால் 4 வாரத்திற்குள் விசா வழங்க நடவடிக்கை: அமெரிக்க அதிபருக்கு பரிந்துரை!!
இந்தியாவில் இருந்து விண்ணப்பித்தால் இரண்டு முதல் 4 வாரத்திற்குள் விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபருக்கு வெளியுறவுத்துறை பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்கா செல்ல விசா கேட்டு இந்தியர்கள் விண்ணப்பித்தால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விசா நடைமுறையை மாற்றி அமைக்க அமெரிக்க அதிபர் பைடனுக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
சிலிக்கான் வேலி பகுதியில் படிக்கவும் ,சுற்றுலாவுக்கும் விண்ணப்பித்த இந்தியர்கள் 800 நாட்களுக்கும் மேலாக காத்திருந்த தகவலும் இதில் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து விசா வழங்க வீடியோ நேர்காணல் நடத்த அனுமதி அளிப்பது, அதிக கவுன்டர்களை திறப்பது, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து விசா கேட்டு விண்ணப்பித்தவர்கள் 400 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் காத்திருக்கும் நேரத்தை 2 முதல் 4 வாரங்களாக குறைப்பது, இந்தியாவில் இருந்து முதல் முறையாக விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு குறிப்பாக பி1 (வணிகம்), பி2 (சுற்றுலா) வகைகளின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு நீண்ட காலம் காத்திருக்க வைக்காமல் உடனே விசா வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.