ஆந்திர மாநிலத்தில் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் முதியவர் பட்டினியால் மரணம்!!
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மெலியபுட்டி மண்டலம் பத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சவரா பாரி (வயது 86).மாமிடிகுட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாமல் தனிமையில் வசித்து வந்தார்.அரசு வழங்கிய முதியோர் உதவி தொகை மூலம் பிழப்பை நடத்தி வயிற்று பசியை போக்கி வந்தார். இந்த நிலையில் முதியோர் உதவித்தொகை பெறுவதில் புதிய முறை கொண்டுவரப்பட்டது இதில் கைரேகை இல்லை என்ற காரணத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு முதியோர் உதவி தொகை வழங்குவதை அதிகாரிகள் நிறுத்தினர். இதனால் வருமானம் இன்றி வாழ வழி இன்றி சவேரா பாரி தவித்தார். அவரை உயர் அதிகாரிகளிடம் பலமுறை அழைத்துச் சென்றும் நீதி கிடைக்கவில்லை.
பல முறை முயற்சித்தும் தீர்வு கிடைக்கவில்லை. மெலியபுட்டி மண்டலம் நெலபொன் துலோ தெக்காளி சப்-கலெக்டர் ராகுல்க்குமார ரெட்டி சிறப்பு முகாம் நடத்தினார்.அப்போது உடல் நலம் குன்றிய முதியவர் என்று முறையிட்டாலும், கண்பார்வை பாதிக்கப்பட்டதாகச் சொல்லியும், கருணை காட்டவில்லை. ஒன்றரை வருடங்களாக சவாராபாரியின் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை. ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் சாப்பாட்டுக்கு வழியின்றி கடைசியாக நேற்று காலை பட்டினியால் இறந்தார். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.