;
Athirady Tamil News

பிராமணர் சமூகத்தை அவமதிக்கவில்லை: குமாரசாமி விளக்கம்!!

0

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் சாதியை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என்று நான் கூறினேன். எனது இந்த கருத்தில் குழப்பம் இல்லை. ஆனால் தெளிவு இருக்கிறது. சிருங்கேரி மடத்தின் மீது அந்த சாதியினர் தாக்குதல் நடத்தினர். இது வரலாறு. இந்த வரலாற்றை யாரும் திரித்து கூற முடியாது. நான் கூறிய கருத்தே ஒன்று, அதை பா.ஜனதாவினர் திரித்து வேறொரு கருத்தை கூறுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும். உண்மையை கூறியுள்ளேன். அதுபற்றி விவாதம் நடைபெறட்டும்.

சிவாஜி, பசவவேஸ்வரய்யா, புத்தர், மகாத்மா காந்தி, அம்பேத்கர் போன்ற மாபெரும் தலைவர்களையே சங்பரிவார் அமைப்புகள் விட்டு வைக்கவில்லை. என்னை விமர்சிப்பவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் கருத்தை விட்டுவிட்டு தேவை இன்றி பா.ஜனதா தலைவர்கள் ஆவேசம் அடைகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எனக்கு தோல்வி பயம் எனக்கு எதிராக பா.ஜனதா தலைவர்கள் பேசலாம், சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி தவறான கருத்துகளை பரப்பலாம்.

எனக்கு தோல்வி பயம், ஏமாற்றம் என்று சொல்கிறார்கள். அம்பேத்கர், பசவேஸ்வரா, புத்தர் கூறியதையே நான் சொல்கிறேன். இதில் பிராமணர் வகுப்பை நான் எங்கு அவமானப்படுத்தினேன். நான் அந்த சமூகத்தை அவமதிக்கவில்லை, அவமதிக்கவும் மாட்டேன். அதனால் இதற்கு மீண்டும் மீண்டும் நான் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமற்றது. இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.