இலங்கை ஜப்பான் நிறுவனங்களின் நம்பிக்கையை பெறவேண்டும் – ஜப்பான்!!
ஜப்பான் இலங்கை தனது நாட்டு நிறுவனங்களின் நம்பிக்கையை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை தனது பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஜப்பானிய நிறுவனங்களின் நம்பிக்கையை பெறவேண்டும்,ஜப்பானிய நிறுவனங்களின் கரிசனைக்கு தீர்வை காணவேண்டும் என ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டகே சுன்சுகே இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்ததாக இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தவேளை ஜப்பான் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஜப்பானிய நிறுவனங்கள் பங்களிப்பு செய்ய முடியும் ஆனால் இலங்கை ஜப்பானிய நிறுவனங்களின் நம்பிக்கையை பெறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவிருந்த புகையிரத திட்டம் இரத்துச்செய்யப்பட்டதை ஜப்பானின் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணயநிதியம் தொடர்பான பொருளாதார கொள்கைகள் ஆட்சிமுறை சீர்திருத்தங்களை இலங்கை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தும் எனவும் ஜப்பான் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”