நாட்டின் சில பகுதிகளில் இன்று மிதமான மழை !!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்பரப்புகளில் இன்று ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய மாகாணத்திலும் பதுளை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.