அமெரிக்க விசாவில் ஏற்பட்ட புதிய மாற்றம்! !
அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியற்றிய நாளில் இருந்து விசா மற்றும் குடியேற்ற விதிகளைத் தொடர்ந்து தளர்த்தி வரும் காரணத்தால் புலம்பெயர் அமைப்பினருக்கு பல சாதகமான விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் அமெரிக்கா அரசு 2004 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு சேவையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும், அமெரிக்காவிலேயே குடியுரிமை பெற வேண்டும் என நினைக்கும் அனைத்து புலம்பெயர் அமைப்பினருக்கும் பலன் அளிக்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்ட ஜோ பைடன் அரசு, இன்று விசா புதுப்பிப்பு மூலம் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரும் முறையைச் செயல்படுத்தியுள்ளது.
அமெரிக்கா அரசு பல ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் சில ஹெச்1பி(H1P) மற்றும் எல்1(L1) விசா பிரிவில் இருப்பவர்களுக்கு மாத்திரம் உள்நாட்டு விசா மறுமதிப்பீட்டு (domestic visa revalidation) திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா அரசு உள்நாட்டு விசா மறுமதிப்பீட்டு திட்டத்தின் மூலம், அதன் ஏனைய நடவடிக்கைகளை 2023 ஆம் ஆண்டுப் பிற்பகுதியில் செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் வெற்றி மற்றும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அடுத்த சில வருடத்தில் குறித்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் 2004 வரையிலான காலகட்டத்தில் புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்கள்(non-immigrant visas) கீழ் சில பிரிவுகளுக்கு மட்டும் குறிப்பாக ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு, அமெரிக்காவிலேயே உள்நாட்டு விசா மறுமதிப்பீடு (domestic visa revalidation) திட்டத்தின் மூலம் அமெரிக்காவிலேயே விசா முத்திரை செய்து புதுப்பிப்பு செய்யப்படவுள்ளது.
பொதுவாக அமெரிக்கா அரசு வெளிநாட்டில் இருந்து அந்நாட்டில் பணியாற்ற அனுமதி அளிக்கும் முக்கியமான விசா தான் இந்த ஹெச்1பி விசா. இந்த விசா மூலம் 3 வருடத்தில் அமெரிக்காவில் தங்கி பணியாற்ற முடியும்.வீசா முடிவின் பின்பு 6 வருடத்திற்கு நீட்டிக்க முடியும்.
குறித்த விசாவின் மூலமாக ஏராளமான புலம்பெயர் தொழிநுட்ப மற்றும் தனியார் ஊழியர்கள் அமெரிக்காவில் பணியாற்ற செல்கின்றனர்.
தற்போதைய நிலையில் உள்நாட்டு விசா மறுமதிப்பீடு திட்டத்தின் கீழ் வருடத்திற்கு எத்தனை விசா புதுப்பிப்பு செய்யப்படும் என்பதை அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.