இங்கிலாந்தில் செயலிழப்பின் போது வெடித்துச் சிதறிய வெடிகுண்டு!!
இங்கிலாந்து நகரமொன்றில், வெடிகுண்டு ஒன்றைச் செயலிழக்கச் செய்யும்போது, திடீரென அது வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று, இங்கிலாந்தின் Great Yarmouth என்னுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
Great Yarmouth என்னுமிடத்தில் அமைந்துள்ள Yare நதியின் அருகில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டும்போது, 250 கிலோ எடையுள்ள குறித்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது, இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட, வெடிக்காத ஒரு வெடிகுண்டு என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இராணுவ வெடிகுண்டு நிபுணர்கள் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து, அந்த வெடிகுண்டை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகளைத் ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், எதிர்பாராதவிதமாக, திடீரென அந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. அந்த வெடிகுண்டு வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வை 15 மைல் தொலைவுக்கு உணரமுடிந்ததாகவும், கட்டிடங்கள் குலுங்கியதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த வெடிகுண்டு பயங்கர சத்தம் மற்றும் ஒளியுடன் வெடித்துச் சிதறும் காட்சிகளை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
அதிர்ஷ்டவசமாக, இந்த பயங்கர சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.