பூனைக் குட்டியால் ஒரு மில்லியன் வெள்ளியை இழந்த பெண்!
இணையம் மூலமான crypto கட்டண மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில், இணையம் மூலம் பூனைக்குட்டி ஒன்றை தத்தெடுக்க முயற்சி செய்த பெண் ஒருவர் சுமார் ஒரு மில்லியன் வெள்ளியை இழந்துள்ளார்.
குறித்த சம்பவம் ஹாங்காங்கில் இடம்பெற்றுள்ளது.
இணையம் மூலம் பழக்கமான நபர் ஒருவர் குறித்த பெண்ணுக்கு பூனைக்குட்டியை இலவசமாகக் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்.
பின்னர், பூனைக் குட்டி வேறொரு நாட்டிலிருந்து ஹாங்காங்கிற்கு கொண்டு வரும் வழியில் இறந்து விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
இதற்காக காப்பீட்டினை பெறத் தகுதி இருப்பதாகவும் குறித்த நபர் அந்தபெண்ணிடம் சொல்லியுள்ளதுடன், காப்புறுதியை பெற வேண்டுமாயின் அவர் முதலில் “நிர்வாகக் கட்டணங்கள்” செலுத்த வேண்டும் எனப் பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதனால், ஒரு மில்லியன் வெள்ளி மதிப்பிலான 40 crypto கட்டணங்களைச் செலுத்தி அந்தப் பெண் ஏமாந்து போயுள்ளார்.