டெங்கு தொற்றாளர்கள் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு !
இந்த வருடத்தில் இலங்கையில் 7,647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் 6,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாதத்தில் ஏற்கனவே 1,150 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த மாதம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து தலா 1,000 மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகினர்.
மேலும் இந்த மாதத்தில் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் 218 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 172 தொற்றாளர்களும் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.