ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் மரணம்: ஹாலிவுட்டில் இரங்கல்!!
ஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட இயக்குனர் ஹக் ஹட்சனின் திடீர் மறைவால், ஹாலிவுட் திரைத்துறையினர் சோகமடைந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஹக் ஹட்சன் (86), வயோதிகத்தின் காரணமாக லண்டனின் சேரிங் கிராஸ் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக தொடர் சிகிச்சையில் இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்ற ‘சாரியட்ஸ் ஆஃப் ஃபயர்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ஹக் ஹட்சன் சர்வதேச புகழ்பெற்ற பெற்றார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விளம்பர படங்கள், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை இயக்கி படிப்படியாக திரைப்படத் துறையில் முன்னேறினார். ‘சாரியட்ஸ் ஆஃப் ஃபயர்’ என்ற திரைப்படத்தின் கிரேக்க இசையமைப்பாளர் வான்ஜெலிஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இறந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஹக் ஹட்சனின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.