துருக்கி சிரியா நிலநடுக்கம் அமெரிக்காவின் சதி – பகீர் தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் !!
துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6-ம் திகதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
மீட்பு பணிகளின் போது தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. நேற்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 24000ஐ கடந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 28000ஐ கடந்துள்ளது.
மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதற்கிடையில் உலகத்தை திரும்பி பார்க்கச்செய்யும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் அமெரிக்காவின் சதியாக இருக்கலாம் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எச்ஏஏஆர்பி (HAARP) என்ற சதுரக்குறியீடானது( hashtag), நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இதிலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான டுவீட்கள் தற்போதுவரை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க வானிலை ஆயுதம் என அழைக்கப்படும் எச்ஏஏஆர்பி துருக்கி பூகம்பத்தை ஏற்படுத்தியதாக சதி கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.
சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ள தகவல்களில் எச்ஏஏஆர்பி என்பது ‘ஹை-பிரீக்வென்சி ஆக்டிவ் அரோரல் ரிசர்ச் புரோகிராம்’ என்பதைக் குறிக்கிறது.
இந்த அமெரிக்க ஆராய்ச்சி 1990களில் இருந்து செயல்பட்டு வருகிறது. குறித்த விமானப்படை ஆராய்ச்சி ஆய்வகம் அலாஸ்காவின் ககோனாவுக்கு அருகில் அமைந்துள்ளதோடு, தற்போது அலாஸ்கா பேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகத்தால் இயக்கப்படுகிறது.
பூமியை சூழவுள்ள ரேடியோ கம்யூனிகேஷன் தொழிநுடட்பத்தில் கவனம் செலுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த புகழ்பெற்ற தொழில்நுட்பத்தை அமெரிக்க போர்க்கப்பல் செயல்படுத்தியதால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என ஆய்வாளர்களின் கருத்துக்கள் மூலம் கூறப்படுகிறது.
ஆனால் இது இயற்கையான நிலநடுக்கம் தான் என பலர் மறுத்து வருகின்றனர். பிளாட் எர்த் சோன் என்பவர் தனது டுவிட்டரில் அமெரிக்க பத்திரிகை ஒன்றை மேற்கோள் காட்டி துருக்கியில் நிலநடுக்கத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, வானத்தில் ஒரு விசித்திரமான மேகம் தோன்றியது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அந்த மேகத்தையும் பூகம்பத்தின் மையத்தையும் பாருங்கள்.
இது லெண்டிகுலர் மேகம் என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு இயற்கை நிகழ்வாகும் என கூறி உள்ளார்.