;
Athirady Tamil News

துருக்கி நிலநடுக்க உயிரிழப்புகள் 50000 அண்மிக்கும் – ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!

0

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மிக்க கூடும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு துருக்கிக்கான விஜயத்தின் பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் நேற்றையதினம் நில அதிர்வு கேந்திர ஸ்தானமான கஹரஸ்மன்மராஸ் பகுதிக்கு சென்றிருந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
42.8 மில்லியன் டொலர் நிதி

இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பதை துல்லியமாக கூற முடியாது.

நிலநடுக்கத்தால் 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி மற்றும் சிரியா முழுவதும் குறைந்தது 870,000 பேருக்கு உணவுத் தேவைப்பாடு உள்ளது.

சிரியாவில் மட்டும் 5.3 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். உடனடி சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 42.8 மில்லியன் டொலர் நிதியை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களைக் கோரியுள்ளது.
தெற்கு துருக்கியில் மோதல்

துருக்கி நிலநடுக்க உயிரிழப்புகள் 50000 அண்மிக்கும் – ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Turkey Syria Death Count Un List

துருக்கியில் மட்டும் மீட்புப் பணிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 8,294 பேரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 32,000-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்று வருவதாகக் வருகின்றனர்.என தெரிவித்தார்.

இதற்கிடையில், தெற்கு துருக்கியின் ஹார்டே பகுதியில் அடையாளம் தெரியாத பல குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஜேர்மன் மற்றும் ஆஸ்திரிய படைகள் படைகள் தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.