;
Athirady Tamil News

பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை தடுக்க அரசு நடவடிக்கை: எல்லை கல் அமைக்கும் பணி துவங்கியது!!

0

கோவளம் அடுத்த முட்டுக்காடு முதல் மரக்காணம் வரையிலான பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதிகளை ஆக்ரமித்து சிற்பக் கூடங்கள், வீடுகள், பட்டறைகள், ஈரால் மீன் பண்ணைகள் அமைத்து ஆக்ரமிப்பாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் மழைக்காலத்தில் நீர் வரத்து பாதிக்கப்பட்டது.

குப்பைகள் ஒதுங்கி சுற்றுச்சூழல் மாசடைந்து வந்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஆக்ரமிப்புகளை அகற்றி முறையாக அளவிட்டு, மேலும் ஆக்ரமிக்காத வகையில் எல்லை கற்களை நடவேண்டும் என தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரி திலிப்குமார் தலைமையில் நில அளவினர் குழுவினர் பக்கிங்காம் கால்வாயை அளவிட்டு எல்லை நிர்ணயம் செய்வதற்காக எல்லை கல் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.