ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு – பாதிக்கப்படவுள்ள மேற்கத்திய நாடுகள்!
ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விலை வரம்பு நிர்ணயித்தமைக்கு ரஷ்யா பதிலடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், எண்ணெய் உற்பத்தியை அடுத்த மாதத்திலிருந்து குறைக்கவிருப்பதாக ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ விலை வரம்பை அமுல்படுத்தும் நாடுகளுக்கு இனி எண்ணெய் ஏற்றுமதி செய்வதில்லை என ரஷ்யா கூறியுள்ளது.
அந்தவகையில், ரஷ்யாவின் நாளாந்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 5 லட்சம் பேரல்கள் குறைக்கப்படும் என அந்நாடு கூறியுள்ளது.
ரஷ்யாவின் இந்த அதிரடி அறிவிப்பு, ரஷ்ய கச்சா எண்ணெயை எதிர்பார்க்கும் மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் பதிப்பாக அமையும் என சொல்லப்படுகின்றது.