துருக்கியில் மீட்புக் குழுக்கள் மோதல் – முக்கிய இரு நாடுகள் வெளியேறுகிறது – மோசமடையும் நிலவரம்!
துருக்கி மற்றும் சிரியா நில நடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28000 கடந்துள்ளநிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்டு 100 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில், பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபடும் குழுக்களுக்கிடையில் முதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் முக்கிய இரு நாடுகள் வெளியேறுவதாகவும் கூறப்படுகின்றது.
துருக்கி மற்றும் சிரியாவில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஜேர்மன் மீட்புக் குழுவும் ஆஸ்திரிய இராணுவமும் நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி பெயர் குறிப்பிடப்படாத குழுக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முக்கிய இரு நாடுகள் வெளியேறி வருவதாக சொல்லப்படுகின்றது.
இதேவேளை, துருக்கியில் உணவு விநியோகம் குறைந்து வருவதாகவும், வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், வடக்கு மற்றும் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தன்னார்வ மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.